/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_336.jpg)
கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர்சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான 'தலைநகரம்' படத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரமும், அவர் பேசும் நகைச்சுவை வசனங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து இயக்குநர் சுராஜ் நடிகர் வடிவேலுவை வைத்து 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். ரெடின்கிங்ஸ்லி, சிவாங்கி, ஷிவானிஆனந்தராஜ்உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் நடன இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது. நாய் சேகர் படத்தில் நடிகர் வடிவேலு ஒரு பாடலை பாடல் பாடியுள்ளதாகவும், அந்த பாடலுக்கு நடனம் அமைக்க பிரபு தேவாஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் பாடலில்சிறப்பு தோற்றத்தில் தோன்ற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 'காதலன்', 'மனதை திருடிவிட்டாய்' உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளதுரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)